திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் வளைவு இடித்தழிக்கப்பட்டமைக்கு இந்துசமயப் பேரவை கடும் கண்டனம்!

Monday, March 4th, 2019

மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் வளைவு இடித்தழிக்கப்பட்ட சம்பவம் கத்தோலிக்கரின் மதவெறிச் செயலை எடுத்துக் காட்டுகிறது. இச் செயல் அவர்களின் அழிவை நோக்கிய நகர்வே என்று இந்து சமயப் பேரவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்துசமயப் பேரவையின் செயலாளர் சக்திகிரீவன் ஒப்பமிட்டு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

இந்துக்களின் புனித நாளான சிவராத்திரி தினத்துக்கு முதல்நாள் ஈழத்தின் பாடல் பெற்ற திருக்கேதீஸ்வரத்திற்கு செல்லும் வழியில் அமைக்கப்பெற்ற வளைவு இடித்தழிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேரவை அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இது கத்தோலிக்கர்களின் மதவெறிச் செயலை துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது. கத்தோலிக்கர்களை வன்முறைக்குத் தூண்டுவதை மனிதநேயம் படைத்த உலகு ஒருபோதும் அனுமதிக்காது.

இவ்வளைவு சட்டத்துக்கு முரணாக அமைக்கவில்லை என்பதனை திருக்கேதீஸ்வரத் திருப்பணி சபை பகிரங்கப்படுத்தியுள்ளது. அதேநேரம் சட்டபூர்வமற்ற முறையில் அமைக்கப்பட்ட வளைவாக இருப்பின் அதனை இடிக்கும் அதிகாரம் கத்தோலிக்கர்களுக்கு யார் வழங்கினர்?

தமிழ்க் கலாச்சாரங்களைப் பாதுகாக்க கத்தோலிக்கர்கள் கடந்த பல தசாப்பதங்களாக நடாத்திய போராட்டம் கபடத்தனமானது என்பதனை இந்நிகழ்வு கோடிட்டுக் காட்டுகின்றது.

சமாதான வாழ்வைக் குலைக்க முற்படுகின்றார்கள் என்பதோடு, தமிழ்க் கலாச்சாரத்தை பூண்டோடு அழிக்க கத்தோலிக்கர் துணிந்து நிற்பதன் முத்திரை வெளிப்பட்டுள்ளது. இலங்கை அரசும் குறிப்பாக வடக்கு மாகாண ஆளுநரும் உடனடியாக இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதேநேரம் சர்வதேசத்தில் சாந்தியும் சமாதானமும் நிலவவேண்டும் என போதித்து, பிறிதொரு மதத்தின் பெயரில் எம்மை அழித்தமை தொடர்பில் சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் இக்கத்தோலிக்க மதகுருமார், தமது சொந்த இனத்தின் தாய் மதத்தவர்களின் அடயாளங்களை அழிக்க முயல்வதன் மூலம் இவர்கள் சர்வதேசத்தை நாடிச்செல்வது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts: