திருக்கேதீஸ்வரத்துக்கு வருகைதர வெளிமாவட்ட பக்தர்களுக்கு அனுமதியில்லை -மன்னார் அரசாங்க அதிபர்அறிவிப்பு!

Tuesday, February 16th, 2021

எதிர்வரும் மார்ச் மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ள மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விரத விழாவில் வெளிமாவட்டங்களில் இருந்து செல்வோருக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டி மெல் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் 11 ஆம் திகதி அனுஷ்ட்டிக்கப்படவுள்ள மஹா சிவராத்திரி விரதமானது சுகாதார வழிமுறைகளுடன் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, மன்னார் மாவட்டத்தில் தங்கியுள்ளவர்கள் தவிர்ந்து ஏனைய மாவட்டங்களில் உள்ளவர்கள் தங்களது பகுதிகளிலேயே அதனை கடைப்பிடிக்குமாறு அவர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: