திருக்குறள் போல் ஒரு தமிழர் தேசக் குரல் இலங்கை நாடாளுமன்றத்தில்.

Friday, November 25th, 2016

நேசமுடன்  உங்களுக்கு  வணக்கம்!…

உலகப்பொதுமறை என்று புகழப்படுகிறது திருக்குறள்!
அது பொய்யா மொழிப்புலவர் வள்ளுவர் தந்தது.

திருக்குறளில் இல்லாதது ஒன்றுமே இல்லை.
ஆனாலும் அதில் இல்லாத ஒன்று தமிழ் என்ற சொல் மட்டுமே.

திருக்குறளில் 133  அதிகாரங்கள் உண்டு. 1330 குறள்கள் உண்டு.
12000 சொற்கள் உண்டு,

இத்தனை சொற்களிலும் தமிழ் என்ற சொல் மட்டும்
திருக்குறளில் இல்லை என்பதுதான் அதிசயம்.

எண்பதற்கும் அதிகமான  பிற மொழிகளில் திருக்குறள்
மொழி பெயர்க்கப்பட்டு,…

உலக அரங்கில் தமிழுக்கு முடி சூட்டி உலக இலக்கியங்களில்
மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

இன்று தமிழ், தமிழ் என்று அடிக்கடி முழங்குவோர்
தமிழ் மக்களுக்காக எந்த சாதனைகளையும் ஆற்றியிருக்கவில்லை.

ஆனாலும் அதற்கு மாறாக திருக்குறள் போல்
தமிழ் என்ற சொல்லை உச்சரிக்காமலேயே
தமிழ் பேசும் மக்களுக்காக முடிந்தளவு
காரியம் ஆற்றியவர் வேறு யாருமல்ல.
அவர் ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்தான்.

அந்த தெருக்களை கேளுங்கள்  அவை சொல்லும்…..
நகரங்களை கேளுங்கள் அவைகளும் சொல்லும்……
பட்டி, தொட்டி, கிராமங்கள், வயல்கள், நிலங்கள்,
கடல் எல்லைகள் என்று,……

வாழும் மக்களின் ஆழ்மனங்கள் ஒவ்வொன்றும்
ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி ஆற்றிய
தமிழர் தேசப்பணிகளை ஊர் பார்த்த உண்மைகளாக
ஒவ்வொன்றாக சொல்லும்.

உண்மைகளை ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள்
அரசியல் காழ்ப்புணர்சியில் நின்று
அவதூறு பொழிகிறார்கள் என்பதே உண்மை.

அரசியலுரிமை,… அபிருத்தி,… இந்த இரண்டுமே
ஆரம்பங்களில் தமிழ் பேசும் மக்களின்
பிரச்சினைகளாக இருந்தன.

இவைகளுக்காக தொடங்கியதே தமிழ் பேசும் மக்களின்
உரிமைப்போராட்டம்.

ஆனாலும் உரிமைப்போராட்டம்  என்பது அழிவு யுத்தமாக
மாறியதால் அந்த யுத்த வடுக்கள் தமிழ் பேசும் மக்களின் மீது
சுமத்திய பிரச்சினைகள் ஏராளம்.

இவை எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு தேவை என்றுதான்
ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று
நாடாளு மன்றத்தில் அடிக்கடி குரல் எழுப்பி வருகிறார்.

இன்று நாடாளுமன்றத்தில் எந்த பிரச்சினைகளுக்காக
அவர் குரல் கொடுத்து வருகிறாரோ,..

அந்த பிரச்சினைகளுக்கெல்லாம் அவர் அன்று அமைச்சராக
இருந்த போது சலசலப்பில்லாமல்  முடிந்தளவு தீர்வு
கண்டு வந்தவர்.

ஆனாலும் அவருக்கு போதியளவு அரசியல் பலம்
இருந்திருக்கவில்லை. அரசியல் பலம் அவர் பக்கம்
இருந்திருந்தால் அனைத்திற்கும் முழுமையான தீர்வு
கிடைத்திருக்கும்.

குறைந்த பட்சமான நாடாளுமன்ற ஆசனங்களை
கொண்டிருந்த போதும் அரசுடனான ஒரு நல்லெண்ண
உறவின் மூலம் அமைச்சராக இருந்தவர்  ஈ.பி.டி.பி தலைவர்
டக்ளஸ் தேவானந்தா.

இன்று வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு கொண்டிருக்கும்
அரசியல் பலத்தோடு டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
அமைச்சராக இருந்திருந்தால் தமிழ் பேசும் மக்களின்
அரசியல் தலைவிதியே மாற்றி எழுதப்பட்டிருக்கும்.

காலம் இந்த உண்மையை
இன்று ஒப்புக்கொண்டுள்ளது.

ஆடுகிற மட்டை ஆடிக்கறக்க வேண்டும்.
பாடுகிற மாட்டை பாடிக்கறக்க வேண்டும்.

அமைச்சராக இருந்த போது அர்த்தமற்ற வகையில்
குரலேதும் எழுப்பாமல், கூட்டத்தில் கூடி நின்று கூவி பிதற்றாமல்,…

சூழலுக்கு ஏற்றவாறு தனது மதிநுட்ப வழி நின்று
செயலில் எவைகளை எல்லாம் ஆற்றி முடித்தாரோ,..

அந்த பிரச்சினைககள் யாவும் விட்ட குறையில் இருந்து
தொடர்ந்தும் தீர்க்கப்பட வேண்டும் என்றே இன்று நாடாளுமன்றத்தில்
டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குரல் கொடுத்து வருகிறார்.

ஆகவே,… அன்று அமைச்சராக  இருந்த போது
அரசியல் பலத்திற்கு ஏற்றவாறு முடிந்தளவு செயலில்
செய்து காட்டியவரே,..

இன்று அமைச்சராக இல்லாத போது
நாடாளு மன்றத்தில் தமிழ் பேசும் மக்களின் குரலாக
ஒலித்து வருகிறார்.

திருக்குறளை ஒத்த தமிழர் தேசக்குரல் டக்ளஸ் தேவானந்தா என
வந்து குவியும் வாழ்த்துக்களுக்கு நன்றி.

மறுபடியும்
மறு மடலில்
சந்திப்போம்!

Related posts: