திருக்கார்த்திகை விரதத்தை முன்னிட்டு விளக்குகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்!

Tuesday, December 6th, 2022

திருக்கார்த்திகை விரதத்தை முன்னிட்டு சந்தையில் விளக்குகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் உள்ள சந்தை வியாபார நிலையங்களில் விளக்குகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுப்பட்டிருந்தனர்.

இதேவேளை யாழ். நல்லூர் திருநெல்வேலி வியாபார சந்தைப்பகுதியிளும் விற்பனை மும்முரமாக இடம்பெற்றிருந்தது.

இதன்படி வருகின்ற புதன்கிழமை வீடுகளில் திருக்கார்த்திகை திருநாள் இடம்பெற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கார்த்திகை தீபத்திருவிழா அன்று நமது வீட்டில் 48 விளக்குகள் ஏற்றுவது ஐதீகம். 48 விளக்குகள் ஏற்றினால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பதும் ஐதீகம். நவக்கிரகங்கள் 9 + ராசி 12 + நக்ஷத்ரங்கள் 27 என 48 தீபங்கள் ஏற்றும் போது தடைகள் அகலும் என்றும் நம்பப்படுகின்றது

கார்த்திகை மாதம் என்பது சூர்ய பகவான் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கக்கூடிய மாதமாகும். ஜோதிட ரீதியாக விருச்சிக ராசி என்பது காலபுருஷ தத்துவத்தில் எட்டாம் ராசியாக வருகிறது. எனவே அந்த மாதத்தில் நமக்கு மனச்சலனம் ஏற்படலாம். மனதில் சலனம் ஏற்படும்போது விளக்கினை ஏற்றி வைத்து வழிபாடு செய்யும்போது நமது மனம் ஒருமுகப்படும். நம்மால் எந்த வேலையையும் சரியாக செய்ய முடியும். குழப்பங்கள் அகலும். தெளிவான மனநிலையோடு நடந்து கொள்ள முடியும்.

அதனால்தான் வான்வெளியில் முழுநிலவான பௌர்ணமி நாளில் பூமியில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்கிறோம். அப்படி செய்யும் போது இன்னும் நேர்மறை எண்ணங்கள் உருவாகும். நன்மைகளே நடக்கும் என்பது ஐதீகம்.

Related posts: