திருகோணமலை – மட்டக்களப்பு வீதியின் பட்டிதிடல் பகுதியில் பேருந்து – டிப்பர் மோதி விபத்து: 26 பேர் காயம்!

திருகோணமலை – மட்டக்களப்பு வீதியின் பட்டிதிடல் பகுதியில் பேருந்து மற்றும் டிப்பர் ரக வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அம்பாறையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், மூதூரிலிருந்து சேறுவில நோக்கி பயணித்த டிப்பர் ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மூதூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
இலங்கை தனியார் கொள்கலன் போக்குவரத்து சங்கம் பணிப்புறக்கணிப்பு!
கொரோனா தொற்று: முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்!
பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு - இரண்டாம் வாசிப்பு மீதான...
|
|