திருகோணமலை துறைமுகத்தில் அவுஸ்ரேலிய கடற்படை கப்பல்கள்!

Tuesday, March 19th, 2019

திருகோணமலை துறைமுகத்திற்கு அவுஸ்ரேலிய கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் வந்தடைந்துள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைப் கடற்படையின் உதவியுடன் இரண்டாம் உலகப் போரின் போது, மட்டக்களப்புக்கு அப்பால் மூழ்கிய அவுஸ்ரேலியப் போர்க்கப்பலை இணைந்து மீட்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அவுஸ்ரேலியக் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் கடந்த 11 ஆம் திகதி இலங்கை வந்தன.

இந்நிலையில் இக்கப்பல்கள், நேற்று திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் 20ஆம் திகதி நாளை மறுநாள் வரை இங்கு தங்கி நின்று பின்னர் திருகோணமலை துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: