திருகோணமலை எண்ணெய் குதங்கள் விரைவில் இலங்கை வசமாகும் – அமைச்சர் கம்மன்பில அறிவிப்பு!

திருகோணமலையில் உள்ள எண்ணெய் குதங்களை நாட்டுக்கே திருப்பிப் பெற்றுக் கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது விடயம் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவுடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொலன்னாவையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இந்த வவிடயத்தில் இலங்கை முன்வைத்த அனைத்து நிபந்தனைகளுடனும் இந்திய உயர்ஸ்தானிகர் உடன்பட்டுக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் 2017 இல் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தாங்கள் வழங்கிய நிபந்தனைகளுக்கு அவர் இணக்கம் தெரிவித்ததாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இருதய நோயினால் அவதியுறும் சிறுவனின் மருத்துவத்திற்கு உதவிகோரும் ஒரு ஏழை தாய்!
இலங்கை தனியார் கொள்கலன் போக்குவரத்து சங்கம் பணிப்புறக்கணிப்பு!
நான்கு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயம் - பிரதமர் தினேஷ் குணவர்தன சீனாவிற்கு பயணம்!
|
|
செயலிழந்தது பி.சி.ஆர். இயந்திரம் - 48 மணிநேரத்திற்குள் தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இ...
கொவிட்-19 தொற்று பரவாத வகையில் குடும்பத்தினருடன் சித்திரைப் புத்தாண்டை கொண்டாடுங்கள் - சுகாதார வழி...
உரிய திகதிக்கு முன்னர் சரியான தகவல்களை வழங்கத் தவறும் விண்ணப்பதாரிகள், நலன்புரிச் சலுகைகளை இழக்க நேர...