திருகோணமலையில் வறிய மாணவர்களுக்கு ஈ.பி.டி.பியினரால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு!

Friday, June 21st, 2019

வறிய நிலையில் உள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நிர்வாகத்தினரால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டது.

சமூக ஆர்வலர் திருமதி ஜானகி கார்த்திகேசன் பாலகிருஷ்ணன் அவர்களது ஏற்பாட்டில் திருகோணமலை பெரியகுளம் மற்றும் சோலையடி ஆகிய கிராமங்களில் வாழும் ஒருதொகுதி பாடசாலை மாணவர்களுக்கு நேற்றையதினம்  குறித்த துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.

கட்சியின் திருகோணமலை மாவட்டப் பணிமனையில் மாவட்ட நிர்வாகத்தினரது ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: