திரவ உரத்தை இன்றுமுதல் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை – கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!
Friday, November 5th, 2021இலங்கைக்கு கிடைத்துள்ள திரவ உரத்தை இன்று 5 ஆம் திகதிமுதல் விவசாயிகளுக்கு வழங்கத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ஏ.எச்.எம்.எல்.அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் குறித்த உரத்தை கமநல மத்திய நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ஏ.எச்.எம்.எல்.அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடமிருந்து 72 ஆயிரத்து 500 லிட்டர் நனோ நைரஜன் (Nano Nitrogen) திரவ உரம் நேற்றையதினம் இலங்கைக்குக் கிடைத்துள்ளது.
இதேபோன்று கடந்த 2 வாரங்களுக்கு முன்னரும் 1 இலட்சம் லீற்றர் திரவ உரம் இலங்கைக்குக் கிடைத்திருந்தது இந்நிலையிலேயே குறித்த உரத்தை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மேல் மாகாணத்தில் நிலவும் குப்பை பயன்படுத்தி மின்சார உற்பத்தி பெற நடவடிக்கை!
ஆளணி வள அபிவிருத்தியையும் அரசாங்கம் மேற்கொள்ளும் - அமைச்சர் நாமல் தெரிவிப்பு!
சமூக பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை - பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
|
|