தியாகி பொன். சிவகுமாரின் 49 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிப்பு !
Monday, June 5th, 2023பொன். சிவகுமாரின் திருவுருவச் சிலைக்கு ஈழ மக்களஜ ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மலர் மாலை அணிந்து அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார்.
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் மரணமடைந்த முதலாவது போராளி தியாகியான பொன். சிவகுமாரின் 49 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றாகும்(06) . இதனை முன்னிட்டு இன்று காலை அசரை நினைவு கூர்ந்து அஞ்நலி மரியாதை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிலையில் யாழ் உரும்பிராயில் அமைந்துள்ள அவரது நினைவுச் சிலையின் முன்பாக குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இவ் நினைவேந்தலில் முதலில் ஈகைச் சுடரேற்றப்பட்டு பொன். சிவகுமாரின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவேந்தல் உரைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
குறித்த நினைவுகூரல் நிகழ்வில் பலரதப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து பொன். சிவகுமரனை நினைவு கூர்ந்து அஞ்சலிமரியாதை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|