திண்மக் கழிவகற்றலுக்காகக் காக்கைதீவில் 5 ஏக்கர் காணி ஒதுக்கக் கோரிக்கை!

திண்மக் கழிவகற்றலுக்காகக் காக்கைதீவுப் பகுதியில் 5 ஏக்கர் காணி வழங்க வேண்டுமென்று வலி.தென்மேற்குப் பிரதேச சபையினர் சண்டிலிப்பாய் பிரதேச செயலரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானிப்பாய் பட்டினம், மானிப்பாய் கிராமம், பண்டத்தரிப்பு பட்டினம், பண்டத்தரிப்புக் கிராமம் ஆகிய 4 உப அலுவலகங்களைக் கொண்ட 28 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய வலி.தென்மேற்குப் பிரதேசத்தில் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகள் காக்கைதீவில் கொட்டப்படுகின்றன. இந்தப் பிரதேசத்தில் யாழ். மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை ஆகிய இரு சபைகளும் திண்மக் கழிவுகளைக் கொட்டுகின்றன. அதனால் இடநெருக்கடி ஏற்படுவதுடன் சுகாதாரச் சீர்கேடுகளும் உருவாகின்றன.
இந்தக் காரணங்களை முன்னிட்டுத் திண்மக் கழிவகற்றலுக்காகக் காக்கைதீவில் மேலதிகமாக 5 ஏக்கர் காணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன் - கடற்படைத் தளபதி!
உயர்தர வினாத்தாள் ஏற்கனவே வெளியானதா?
கட்டுப்பாடுகளை தளர்த்தும் சுகாதார அதிகாரிகளின் முடிவுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கண்டனம்...
|
|