திண்மக்கழிவு அகற்றுவதற்கான நிதியை அரசினூடாகப் பெறுவதற்கு நடவடிக்கை – அமைச்சர் சம்பிக ரணவக்க !
Wednesday, May 30th, 2018எதிர்வரும் 80 வருடகாலப் பகுதிக்கு திண்மக்கழிவகற்றலுக்கான தேவைப்படும் நிதியை அரசினூடாகப் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது என மாநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.
மொரட்டுவை கட்டுபெத்த பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
மீதொட்டமுல்ல குப்பை மேடு பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அரசு உலக வங்கியிடம் கடனுதவி கேட்டது எனவும் பின்னர் உலக வங்கியினூடாக அது நிராகரிக்கப்பட்டது என்றும் கருத்து வெளியிட்டிருந்தனர். ஆனால் அது பொய்யான விடயமாகும்.
அரசால் திண்மக்கழிவு அகற்றலுக்கான கடன் உதவியைப் பெற்றுக்கொள்ளும் திட்டம் எதுவும் முன்வைக்கப்படவில்லை. ஆனால் எதிர்வரும் 80 வருட காலப் பகுதிக்கும் கொழும்பு உள்ளிட்ட ஏனைய நகரங்களிலுள்ள திண்மக் கழிவுகளை அகற்றுவதற்குத் தேவையான நிதியினை அரசினூடாக பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|