திட்டமிட்டபடி 98 வீதமான பாடசாலைகளை மீண்டும் திறக்கப்பட்டன – திங்கள்முதல் மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை அதிகரிக்கும் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

அடுத்த வாரம் பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை அதிகரிக்கும் என நம்புவதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இதில் திட்டமிட்டபடி 98% பாடசாலைகளை மீண்டும் திறக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் மீண்டும் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் வருகை 16% காணப்பட்டதுடன், 26% ஆசிரியர்களும் கடமைக்குத் திரும்பியுள்ளனர்.
சில ஆசிரியர்கள் பதிவேட்டில் கையொப்பமிடாமல் பணிக்குத் திரும்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல கட்டங்களின் கீழ் பாடசாலைகளை மீளத் திறக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பாடசாலைகளை துரிதமாக மீளத் திறந்து நாட்டை வழமைக்குக் கொண்டு வருவது முக்கியமாகும்.
பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க பெற்றோர் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் குழுக்கள் உட்பட அனைத்துப் பிரிவினரின் ஆதரவையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|