திட்டமிட்டபடி குறித்த திகதியில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

இந்த வருடத்துக்கான முதலாம் தவணைக்காக பாடசாலைகள் திட்டமிட்டவாறு எதிர்வரும் 11ஆம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளின் பாடசாலைகளும் திட்டமிட்டபடி எதிர்வரும் 11 ஆம் திகதி திறக்கப்படும்.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் அசிரியர்கள் மட்டத்திலான கூட்டங்களை அடுத்துவரும் நாட்களில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாடசாலைகளுக்கு தேவையான சுகாதார வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டே, பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பால்மா இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை!
ஜனாதிபதித் தேர்தல் : இதுவரை 2540 முறைப்பாடுகள் பதிவு!
பிரியந்த குமாரவின் குடும்பத்தின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் அரசாங்கம் செயற்படும் - அமைச்சர் ஜீ.எல்.பீ...
|
|