திட்டமிட்டபடி ஆசிரியர்களின் போராட்டம்!

Tuesday, July 3rd, 2018

நாளைய தினம் திட்டமிட்டபடி போராட்டம் முன்னெடுக்கப்படும் என கல்வியை பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியம் எச்சரித்துள்ளது.

அந்த ஒன்றியத்தை அங்கத்துவப்படுத்தும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

எனினும், கல்வித்துறையை வீழ்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் நோக்கியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

குறித்த போராட்டத்தால் கல்வி செயற்பாடுகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: