திட்டமிடப்பட்டிருந்த சத்திர சிகிச்சைகள் இரத்து – கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர்!

Wednesday, May 12th, 2021

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளமையால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திட்டமிடப்பட்டிருந்த சத்திர சிகிச்சைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் குமார விக்ரமசிங்க அவசர சத்திர சிகிச்சைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் வெளிநோயாளர் பிரிவு, இருதய நோயாளர் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, சுவாசநோய் சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றில் வழமைபோல சேவைகள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படும் பட்சத்தில் அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு பிரத்தியேகமாக இரண்டு விடுதிகள் தயார் செய்யப்பட்டு, சிகிச்சை வழங்கப்படுவதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் குமார விக்ரமசிங்க மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்து..

00

Related posts: