திட்டமிடப்பட்டிருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அறிவிப்பு !

Tuesday, October 13th, 2020

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக திட்டமிடப்பட்டிருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

எனினும் திட்டமிடப்பட்ட பதிவு மற்றும் மீள்பதிவு நடவடிக்கைகள் தொடரும் என திறந்த பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைள் தொடர்ந்தும் இடம்பெறும் என்பதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதிக்குப் பின்னரே பரீட்சைகள் தொடர்பாக அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிடப்படும் பரீட்சைகள் தொடர்பாக ஒருவார கால குறுகிய காலத்தில் திறந்த பல்கலைக்கழகத்தினது இணையத்தளத்தில் அறிவிக்கப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் தற்போது கொரோனா தொற்று வைரஸ் பரவல் காரணமாக ஓய்வூதியம் வழங் குவதில் சிக்கல் நிலையிருப்பதால் ஓய்வூதிய திணைக்களத்தை இன்று ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல்வரை மூட தீர்மானித்துள்ளதாக ஓய்வூ தியத் திணைக்களம் தெரிவித்துள்ளது

ஓய்வூதியம் பெறும் சகலரும் மறு அறிவித்தல் வரும் வரை சமுகமளிக்க வேண்டாம் என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஓய்வூதியத் திணைக்களத்தில் ஏதாவது சேவையைப் பெற்றுக்கொள்ள 1970 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts: