திடீர் விபத்துக்களினால் வருடாந்தம் சுமார் 12 ஆயிரம் பேர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Thursday, December 30th, 2021

திடீர் விபத்துக்களினால், நாட்டில் வருடமொன்றுக்கு சுமார் 12 ஆயிரம் பேரளவில் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளொன்றுக்கு 35 பேரளவில் திடீர் விபத்துக்களினால் மரணிப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

வருடமொன்றுக்கு 3 முதல் 4 மில்லியனுக்கு இடைப்பட்ட அளவிலானோர் திடீர் விபத்துகளுக்கு உள்ளாகின்ற நிலையில், அவர்களுள் நாளாந்தம் 12 ஆயிரம் பேரளவில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் பண்டிகைக் காலத்தில் விபத்துக்கள் ஏற்படும் நிலைமை அதிகரித்துள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts: