திடீரென மயங்கி வீழ்ந்தவர் சாவு – 4 நாள்களில் 4 ஆவது சம்பவம்!

Thursday, July 26th, 2018

யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த இளைஞர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது. 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார். இவர் மணல் ஏற்றிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார்.

மயங்கி விழுந்தவரை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டார் என்று கூறியுள்ளனர். இளைஞரின் உடல் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, கொக்குவில், பலாலி, சங்கானையைச் சேர்ந்த மூவர் இவ்வாறு திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: