திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு பேருந்து!

Wednesday, July 17th, 2019

ஹைலெவல் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தமையினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மீகொடை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், முழுமையாக எரிந்து நாசமாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரனை – கொழும்பு பயணிகள் பேருந்து ஒன்றை புதுப்பிக்கும் நடவடிக்கைக்காக கொண்டு செல்லும் போது பேருந்தின் பின்பக்கத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.

குறுகிய நேரத்திற்குள் பேருந்து முழுமையாக தீப்பற்றி எரிந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

பேருந்து தீப்பற்றியவுடன் பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், பேருந்து முழுமையாக தீப்பற்றி அழிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.

குறித்த தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பில் மீகொட பொலிஸார் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: