திடீரென தீப்பற்றி எரிந்த மகிழுந்து : யாழில் பதற்றம்!

ஆனைக்கோட்டை – அரசடி பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மகிழுந்து நேற்றிரவு 8 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.
குறித்த சம்பவத்தின் போது மகிழுந்தில் மின் ஒழுக்கு ஏற்பட்டு புகை வெளியேறியுள்ளது. உடனடியாக மகிழுந்தில் பயணித்தவர்கள் இறங்கியுள்ள நிலையில், மகிழுந்து திடீரென தீ பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து யாழ்.மாநகரசபை தீயணைப்பு பிரிவுக்கு மக்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இருப்பினும் மகிழுந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்குடன் சம்பந்தப்பட்ட ஒன்பது சந்தேகநபர்களின் பிணைக் கோரிக்கைய...
இந்துமக்கள் குறைகேள் அரங்கு கருத்துக்களத்தில் பேச அழைப்பு!
விளையாட்டுத்துறை அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றார் நாமல்!
|
|