திடமான அபிவிருத்தி நோக்கங்களை அடைவதில் இலங்கை மின்சார துறையின் பங்களிப்பு பாராட்டத்தக்கது – ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான தூதுவர் பாராட்டு!

Thursday, September 24th, 2020

திடமான அபிவிருத்தி நோக்கங்களை அடைவதில் இலங்கை மின்சார துறையின் பங்களிப்பு பாராட்டத்தக்கது என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான தூதுவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு நாடு தன் அபிவிருத்தி இலக்குகளை நோக்கி பயணிக்கும் போது முன்நோடியாக அமைவது அந்நாட்டின் மின்சார துறையாகும் என ஐ.நா.அமைப்பின் இலங்கை வதிவிட ஒருங்கிணைப்பாளர் திருமதி ஹன்னா சிகர் தெரிவித்துள்ளார்.

மின்சார அமைச்சர் டளஸ் அழகப்பெருமவுடன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடளின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மின்சாரத்தை வினியோகிப்பதற்கு துரிது திட்டங்கள் சிறந்த முறையில் நடைபெறவேண்டும் என்பதோடு வாடிகையாளர்களுக்கு உயந்த நிரந்தர மற்றும் குறைவான விலையில் மின்சாரத்தை வழங்கும் பாரதுரமான பொறுப்பை ஏற்று மின்சார அமைச்சு உள்ளிட்ட சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்றும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும இதன்போது தெரிவித்துள்ளார்.

மக்களின் அன்றாட தேவைகளிள் ஒரு முக்கியமான இடம் மின்சாரத்திற்கு கிடைத்துள்ள்தோடு தற்போது நாட்டு மின்சார உற்பத்தி திட்டங்கள் மீள்பிறப்பாக்க சக்தி மூலமாக பெறுவதற்கு திட்டமிட்டுள்ளது.

ஜனாதிபதி கோடாபய ராஜபக்க்ஷ அவரர்களின் சுபிட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கமைய தேசிய மின்சார அமைப்புக்கு மீள்பிறப்பாக்க சக்தியின் பங்களிப்பினை 70 வீதம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதது.

Related posts: