திங்கள் (11) நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் தொடருந்து கட்டணங்களும் அதிகரிப்பு – குறைந்தபட்ச கட்டணம் 20 ரூபா எனவும் அறிவிப்பு!
Friday, July 8th, 2022எதிர்வரும் திங்கட்கிழமை (11) நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் தொடருந்து கட்டணங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அச்சிடுவதற்காக அரச அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
இதன்படி, தொடருந்து கட்டணத்தை தற்போதைய பேருந்து கட்டணத்தில் பாதி அளவிலும் பார்க்க குறைந்த கட்டணத்தில் அதிகரிக்க முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போதைய குறைந்தபட்ச கட்டணம் பத்து ரூபாவிலிருந்து இருபது ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
1200 வைத்தியர்கள் சேவையில் இணைப்பு!
ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி மன்ற திருத்த சட்டமூலம் சமர்ப்பிப்பு!
சம்பள உயர்வு வழங்கப்பட்டும் போராட்டம் நடத்தும் அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாத...
|
|