திங்கள் அதிகாலைவரை நாடு முழுவதும் பயணத் தடை – இன்றுமுதல் நடைமுறைக்கு வருவதாக இராணுவத் தளபதி அறிவிப்பு!

இன்று வியாழக்கிழமை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நாடு முழுவதும் பயண தடை அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
இதவேளை மேல் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்பவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவைப் போன்ற குறித்த பயணத் தடை மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும், அதே நேரத்தில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இந்த புதிய கட்டுப்பாடு இன்று வியாழக்கிழமை இரவு 11 மணிமுதல் திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
இருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த பயணத் தடை பொருந்தாது என்றும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதி தாய்லாந்து பயணம்!
முறையற்ற வகையில் முதல்வருக்கான நிதி ஒதுக்கீடு : நிராகரித்தது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!
தேசியப்பட்டியில் விகவகாரம் உச்சம் : பதவியை இராஜினாமா செய்தார் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் து...
|
|