திங்கள்முதல் பாடசாலைகள் மீள் ஆரம்பம் – மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் விதம் தொடர்பான கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

Saturday, March 5th, 2022

நாளைமறுதினம் 07 ஆம் திகதிமுதல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மீண்டும் மாணவர்களை குழுக்களாக பாடசாலைக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது

அதன்படி, 20 மாணவர்களை உள்ளடக்கிய வகுப்புகள் தினமும் நடத்தப்பட வேண்டும் என்றும், 21 முதல் 40 வரையில் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட வகுப்புகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு வாரங்களில் தனித்தனியாக அழைக்கப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், 40 மாணவர்களுக்கு மேல் உள்ள வகுப்புகளை 3 சம பிரிவுகளாக பிரித்து கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் பொருந்தும் என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைவரத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2021 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் எல்.எஸ். எம். டி. தர்மசேன தெரிவித்தார்.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மாவட்டமாக தொடர்ந்து கிளிநொச்சி காணப்படுகிறது - அரசாங்க அதிபர் அருமை நாயகம...
விமர்சனங்களை ஒருபோதும் பொருட்படுத்த போவதில்லை - புரட்சிகரமான மாற்றம் நிச்சயம் செய்யப்படும் - ஜனாதிப...
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்கள் ஆரம்பம் - அடுத்த வாரம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளு...