திங்கள்முதல் நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைளும் முழுமையாக ஆரம்பம் – புதிய சுகாதார வழிகாட்டியும் வெளியானது!
Friday, November 19th, 2021நாடு முழுவதும் எதிர்வரும் வாரம்முதல் பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளும் தொடங்க உள்ளன.
இந்நிலையில் பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் வாரம் முதல் மீள தொடங்கவுள்ளதை அடுத்து பாடசாலைகளை நடத்தி செல்வது தொடர்பிலான புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதில் பாடசாலை மாணவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகும் பட்சத்தில், செயற்படும் விதம் தொடர்பாக புதிய சுகாதார வழிகாட்டியில் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொவிட் கொத்தணிகள் உருவாகும் என அச்சம் காணப்படுகின்ற பகுதிகளில் வாழும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கி, பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்..
இதனிடையே
நாட்டில் நிலவி வரும் சூழல் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
தற்போது நிலவி வரும் கொரோனா சூழல் காரணமாக சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்ல மேலதிக சிசுசரிய பேருந்துகளை முன்னெடுக்குமாறு இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
இந்நிலையில் சிசு சரிய பேருந்துகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக பல பேருந்துகள் எதிர்வரும் திங்கள்முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|