திங்கள்முதல் ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பம்!

ஆட்பதிவுத் திணைக்களம் எதிர்வரும் 5 ஆம் திகதி திங்கள்முதல் பொது மக்களுக்கான தனது சேவைகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது..
எவ்வாறாயினும் இச்சேவைகள் முன் பதிவு செய்த குறிப்பிட்ட எண்ணிக்கையானோருக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
இதன்படி தமது தேசிய அடையாள அட்டைகளை பெறும் நோக்கத்துக்காக ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் அலுவலகத்துக்கு வருவதற்கு முன் ஒரு திகதியையும் இலக்கத்தையும் ஒதுக்குவது கட்டாயமாகும்.
முன்பதிவு செய்ய விரும்புவோர் ஆட்பதிவுத் திணைக்களத்தின் உப அலுவலகங்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் அரசாங்கம் அறிக்கையை சமர்ப்பிக்கும்!
பிணை முறி மோசடி விவகாரம்: ஜனாதிபதி விடுத்த விசேட அறிவிப்பு!
காலநிலை செழுமைத் திட்டத்தை முன்னெடுக்க பிரிட்டனிடமிருந்து ஒத்துழைப்பு - ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர...
|
|