தாய் நாட்டிற்கு வருமாறு கோட்டாபய ராஜபக்சவிடம் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்து!

Saturday, August 13th, 2022

விரைவில் தாய் நாட்டுக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜூலை 9 ஆம் திகதிமுதல் ஒரு மாதத்திற்கும் மேலாக வெளிநாட்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தஞ்சமடைந்துள்ளார்.

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்ததை அடுத்து தாய்லாந்து சென்ற முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு சென்றுள்ளார்.

இருப்பினும் தாய்நாட்டுக்கு வருமாறு அவரது சகோதரர் விடுத்த கோரிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து உறுதியான பதில் எதுவும் கிடைக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதிக்கு இலங்கையில் வாழ்வதற்கு எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மகாநாயக்க தேரரைப் பார்க்கச் சென்ற போது, கொட்டப்பிட்டிய ராகுல தேரர், முன்னாள் ஜனாதிபதி குறித்து ரணில் விக்ரமசிங்கவிடம் வினவியுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு வந்து சுதந்திரமாக இருப்பதை சாத்தியமாக்குங்கள் என அவர் கோரிக்கை விடுத்த போதும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதுவும் கூறவில்லை என்றும் செய்திகள் வௌனியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: