தாய் இறந்த  சில நிமிடங்களில் மகன் அதிர்ச்சியில் மரணம்!  

Friday, November 24th, 2017

தாய் இறந்த செய்தியை அறிந்த மகன் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

கச்சேரி நாவலர் வீதியைச் சேர்ந்த தவமணி (72) என்பவர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த வைத்தியர் அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அதை கேட்ட அவருடைய மகனான பிரசன்னா (37) அதிர்ச்சி அடைந்து மயங்கியுள்ளார். அவரை உடனடியாக பரிசோதித்த வைத்தியர் அவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.குறித்த சம்பவம் இன்று(24) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

Related posts: