தாய்லாந்தை சென்ற ஜனாதிபதி – இன்று அந்நாட்டு பிரதமருடன் சந்திப்பு!

Saturday, October 8th, 2016

பாங்கொங்கில் நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி கலந்துரையாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தாய்லாந்து சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கொங்கொங் சுவர்ணபூமி விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

தாய்லாந்து கலாச்சார அமைச்சர் தலைமையிலான குழுவினர் அவரை விமான நிலையத்தில் வைத்து வரவேற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.  ஆசிய வலைய நாடுகளுக்கு பொதுவாக காணப்படும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படும், ஆசிய அபிவிருத்தி கலந்துரையாடல் 34 நாடுகளின் பங்குபற்றலோடு இன்று ஆரம்பமாகி 10ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 9ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த மாநாட்டில் உரையாற்றவுள்ளதோடு, இன்றுஅவர் தாய்லாந்துப் பிரதமரை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளார்.

750533080Untitled-1

Related posts: