தாய்மார் சேலை அணிவது குறித்த சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்தும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை -கல்வி அமைச்சு!

Friday, October 21st, 2016

பாடசாலைக்குள் பிரவேசிக்கும் தாய்மார் சேலை அணிவது குறித்த சட்டத்தை தொடர்ந்தும் கடுமையாக அமுல்படுத்தும் படசாலை அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைக்கு செல்லும் தாய்மார் சேலை அணிந்து செல்ல வேண்டும் என்பது கட்டாயமில்லை என கல்வி அமைச்சினால் அண்மையில் சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்று நிருபத்தை உதாசீனம் செய்யும் அதிபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பதற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தீர்மானித்துள்ளார்.

சில பிரபல பாடசாலைகளில் தாய்மார் சேலை அணிந்தே பாடசாலைக்குள் பிரவேசிக்க வேண்டும் என்ற நியதியை தொடர்ந்தும் அமுல்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் பெற்றோர் கல்வி அமைச்சில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கொழும்பு, கம்பஹா, குருணாகல், கண்டி மற்றும் களுத்துறை போன்ற பிரதான பாடசாலைகள் பலவற்றின் அதிபர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ministry_of_Education-------------------------------------

Related posts: