தாயக மண்ணின் தவிர்க்கமுடியாத அரசியல் சக்தியாக ஈ.பி.டி.பி மிளிர்கிறது – கட்சியின் சர்வதேச அமைப்பாளர் மித்திரன்!

தமிழர் தாயகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மிளிர்வதாக கட்சியின் தவிசாளரும், சர்வதேச அமைப்பாளருமான தோழர் மித்திரன் தெரிவித்துள்ளார்.
தோழர்ர மேஷின் ஏற்பாட்டில், கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரனின் தலைமையில் நேற்று இடம்பெற்ற லண்டன் பிராந்திய முக்கியஸ்தர்களுடனான விஷேட கலந்துரையாடலின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது, நீண்டகாலமாக கட்சியுடன் இணைந்து சேவையாற்றிவரும் தோழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்து, அவர்களை சமுதாயத்தில் அந்தஸ்துள்ள பிரஜைகளாக வாழவைப்பதற்காகவும் புலம்பெயர் தோழர்கள், ஆதரவாளர்கள் முன்வரவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், தமிழ்மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் பல இன்னல்கள், அவமானங்களுக்கு மத்தியில் தொடர்ச்சியாக தமிழர் அரசியல் தளத்தில்மக்களுடன் ஒன்றரவாழ்ந்து, தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று மிளிர்ந்து நிற்பதுடன், வடக்கில் மாத்திரமன்றி, தமிழர் தாயகப் பிரதேசங்கள் எங்கும் இன்று ஒரு அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் ஒரு கட்சியாகவும் எமது கட்சி திகழ்கின்றது. கட்சியின் இந்த வளர்ச்சிக்கு எமது தோழர்களின் பங்களிப்பு மாத்திரல்ல, மறைந்த தோழர்களின் பங்களிப்பும், தியாகங்களும் இன்றியமையாதவையாக இருந்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, கட்சியின் வளர்ச்சிக்காக இடையறாது உழைத்து வரும் தோழர்களின் வாழ்வாரத்தை எதிர்காலத்தில் மேம்படுத்துவது தொடர்பில் உணர்வு பூர்வமாகவும், உணர்ச்சி ததும்பும்வகையிலும் குறித்த கலந்துரையாடலின் போது தோழர் மித்திரன் கருத்துக்களைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்றையதினம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வீடியோ கொன்பிரன்ஸ் மூலம்தொடர்பு கொண்டு தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
அதேவேளை, குறித்த கலந்துரையாடலில் தோழர்களான மாட்டின் ஜெயா, சந்திரன், நிஷாந்தன், சீலன், விக்னேஸ், ரமணன், திலீப் உள்ளிட்ட ஏனைய தோழர்களும் கலந்துகொண்டனர்.
Related posts:
|
|