தாதி மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை ஒத்திவைப்பு – சுகாதார அமைச்சின் ஊடக பிரிவு தெரிவிப்பு!
Thursday, October 8th, 2020தாதி மாணவர் பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளவர்களுக்கான தகுதிகளை பரிசோதனை செய்வதற்கான நேர்முகப் பரீட்சை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நேர்முகப்பரீட்சை மீண்டும் அறிவிக்கும் வரையில் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் ஊடக பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தினால் நடத்தப்படவிருந்த கலைமாணி வெளிவாரிப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் உதவிப் பதிவாளர் எம்.எஸ். உமர் பாறூக் தெரிவித்துள்ளார்
நாளை மறுதினம் 10ஆம் திகதி சனிக்கிழமைமுதல் நடாத்தப்படவிருந்த 2014/2015ம் கல்வி ஆண்டுக்கான இரண்டாம் வருட முதலாம் பருவ கலைமாணி வெளிவாரிப் பரீட்சைகளே . தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனா தொற்று நோய் அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக உதவிப் பதிவாளர் தெரிவித்துள்ளார்
குறித்த பரீட்சை நடைபெறும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படுமெனவும், உதவிப் பதிவாளர் எம்.எஸ். உமர் பாறூக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|