தாதிய கல்விப் பணிப்பாளராக ரஜீலாதேவி பொறுப்பேற்கிறார்!

images (1) Tuesday, March 13th, 2018

யாழ்ப்பாணம் தாதியர் கல்லூரி அதிபராகக் கடமையாற்றிவந்த செல்வி.ரஜீலாதேவி வல்லிபுரநாதன் தாதியக் கல்விப் பணிப்பாளராகப் பதவியுயர்வு பெற்றுள்ளார். அவர் சுகாதார அமைச்சில் நாளை கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

ரஜீலாதேவி வல்லிபுரநாதன் தாதிய உத்தியோகத்தராக 1984 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இணைந்துகொண்டார்.

1984 தொடக்கம் 1991 ஆண்டுவரை வவுனியா ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிய இவர் 1992 வரை தாதிய உயர் கற்கைக் கல்லூரியில் இணைந்துகொண்டார்.

1992 தொடக்கம் 1993 வரை கொழும்பு தாதியக் கல்லூரி தாதிய போதனாசிரியராகவும் 1993 தொடக்கம் 2002 ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாணம் தாதியக் கல்லூரியில் தாதிய போதனாசிரியராகவும் பணிபுரிந்தார்.

2004 யாழ்ப்பாணம் தாதியக் கல்லூரி பதில் அதிபராகவும் 2008 வரை வவுனியா தாதியக் கல்லூரியின் பதில் அதிபராகவும் 2010 வரை யாழ்ப்பாணம் தாதியக் கல்லூரியின் மூத்த போதனாசிரியராகவும் 2010 டிசெம்பரிலிருந்து தற்போதுவரை யாழ்ப்பாணத்திலுள்ள தாதியக் கல்லூரியின் அதிபராகவும் கடமையாற்றிவந்த நிலையிலேயே தாதியக் கல்விப் பணிப்பாளராகப் பதவியுயர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.