தாதியர் பரீட்சைகள் ஒத்திவைப்பு!

Tuesday, May 30th, 2017

அனர்த்த நிலைமையின் காரணமாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சினால் நடத்தப்படவிருந்த சில தாதியர் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் திகதி (2017-06-04) மற்றும் 11ம் திகதிகளில் நாடுமுழுவதிலுமுள்ள மத்திய நிலையங்களில் நடைபெறவிருந்த தரம் ஒன்று தாதியர் அதிகாரிக்கான செயற்பாட்டு பரீட்சை மற்றும் தாதியர் பயிற்சிக்காக நடத்தப்படவிருந்த பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்திய அமைச்சின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) எம்.பி.எல்.ரகுமான் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் , தாதியர் சேவையில் தரம் 1 க்கான செயற்பாட்டு வெட்டுப்புள்ளி பரீட்சை 2017-06-18ம் திகதி நடைபெறவிருப்பதாக தெரிவித்தார். தாதியர் பயிற்சி சேவைக்கு ஆட்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை ஜூலை மாதம் 2ம் திகதி ( 2017-07-02 ) நடைபெறவுள்ளது. இந்த பரீட்சைக்காக தற்பொழுது வழங்கப்பட்டுள்ள பரீட்சைக்கான அட்டை பரீட்சை நடைபெறும் தினத்திற்கும் செல்லுபடியாகும்.சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சின் ஊடக செயலாளர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:

40 வருடகால நடைமுறையை மாற்றியமைத்த யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட்: தனியாரின் அத்துமீறலை எதிர்த்து கல...
தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை அதிகரிக்க தொழிலாளர் ஆணையாளர் தலைமையில் குழு - அமைச்சர் நிமல் ச...
வரி விகிதங்களை திருத்துவது தொடர்பில் நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய. தெர...