தாதியர்கள்  சங்கம் எச்சரிக்கை!

Monday, July 24th, 2017

சில கோரிக்கைகள் முன்வைத்து தாதியர்களும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் திகதியின் பின்னர் கடுமையான தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திறைசேரியின் முன்னாள் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவினால் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளை தவிர்க்க முடியாது என சங்கத்தின் தலைவர் முருத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

Related posts: