தாஜூதீன் கொலை: முன்னாள் காவற்துறை மா அதிபர் கைது செய்யப்படவேண்டும் – சிவில் அமைப்புக்கள்

றக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பாக முன்னாள் காவற்துறை மா அதிபர் என்.கே.இளங்ககோன் கைது செய்யப்படவேண்டும் என அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
முன்னாள் காவற்துறை மா அதிபர் இந்த சம்பவத்திலிருந்து தொடர்ந்தும் மறைந்து இருக்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர். வசீம் தாஜூதீனின் கொலை தொடர்பில் ஏற்கனவே முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் - வெளியானது வர்த்தமானி !
நாட்டை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இலகுவில் தொற்றக்கூடிய தன்மையைக் கொண்டது - சுகாதார அமைச்சு எச்சரிக்...
இந்தியா - சீன இராணுவ தளபதிகளுக்கிடையில் 19 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை!
|
|