தாக்குதலை தடுக்க தவறியவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் நீதிகோருவது வேடிக்கையான விடயம் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர சுட்டிக்காட்டு!

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி கோருபவர்களை அரசாங்கம் மௌனமாக்க முயலவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி கோருபவர்களை அரசாங்கம் மௌனமாக்க முயல்கின்றது என வெளியாகியுள்ள தகவல்களையும் அவர் நிராகரித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களை அரசாங்கம் இலக்குவைக்கின்றது என எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜஹ்ரான் ஹாசிமும் அவரது சகாக்களும் தேவாலயங்களில் குண்டுகளை வெடிக்கவைத்ததால் அப்பாவிகள் கொல்லப்பட்டனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் எட்டுசம்பவங்கள் இடம்பெற்றன இந்த சம்பவங்கள் பயங்கரவாதிகளிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அப்போதைய அரசாங்கத்தை தூண்டியிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டை ஆண்டவர்கள் தாக்குதலை தடுக்க தவறிய பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் நீதிகோருவது வேடிக்கையான விடயம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|