தாக்குதலுக்கு மன்னர் 97 முறை விடுக்கப்பட்ட எச்சரிக்கை – பொறுப்பானவர்கள் அவற்றின் தீவிரத்தைக் கவனிக்காமையால் பல உயிர்கள் பறிபோயின – பாதுகாப்புச் செயலாளர் தெரிவிப்பு!
Sunday, August 16th, 2020ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னர் அடுத்தடுத்து 97 முறை பாதுகாப்பு அமைப்புகளுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்ததாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் தற்போது தகவல் வெளியிட்டுள்ள அவர், மேலும் தெரிவித்ததாவது,
பாதுகாப்பு முகவர்களால் குறித்த தாக்குதல்கள் குறித்து 97 முறை முன்கூட்டியே எச்சரிக்கைகள் வந்த போதிலும், பொறுப்பானவர்கள் அவற்றின் தீவிரத்தைக் கவனிக்கவில்லை. இதன் காரணமாகவே பலர் உயிரிழந்தும், பலர் காயமடைந்த சம்பவமும் இடம்பெற்றது.
தேசிய பாதுகாப்பும், பாதுகாப்பும் நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. எனவே அவற்றைப் பாதுகாக்காமல் ஒரு நாட்டை முன்னேற்றவும் அபிவிருத்தி செய்யவும் இயலாது. ஜனாதிபதியின் தேர்தல் அறிக்கையின்படி நாட்டின் பாதுகாப்பை நோக்கிய பார்வையில் தேசிய பாதுகாப்பை நிலை நிறுத்துவதே மூலக்கல்லாகும்.
2009 மே இல் பிரிவினைவாதம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டபோதிலும், புலம்பெயர்ந்தோரின் ஒரு சிலர் தொடர்ந்து நிதியுதவி அளிக்கும் பிரிவினைவாதச் சித்தாந்தத்தையும் அகற்றவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|