தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் அதிரடியாக பதவி நீக்கம்

Monday, February 6th, 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பதவியிலிருந்து பசீர் சேகுதாவூத்தை நீக்குவதற்கு அக்கட்சியின் உயர்பீடம் தீர்மானித்துள்ளது.

அண்மைக்காலமாக கட்சியின் தலைமைத்துவம் பற்றி முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்ததுடன், கட்சியிலுள்ள முக்கியஸ்தர்கள் பற்றிய இறுவெட்டுக்கள் தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை மதத் தலைவர்களிடம் வழங்கி உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நேற்று சனிக்கிழமை கட்சியின் தலைமையகமான தருஸ்ஸலாமில் இடம்பெற்றது.

இதன்போது கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் பஷீர் சேகுதாவூத்தை கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து நீக்குமாறு உயர் மட்ட உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய அவர் நீக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் பீடக் கூட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

basheer-segu-dawood