தவிசாளர் தன்னிச்சையான செயற்பாடு – பேருந்து நிலையத்துள் சிறு வியாபர கடைகள் அதிகரிப்பு – ஈ.பி.டி.பியின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சிவநேசன் குற்றச்சாட்டு!

கிளிநொச்சி பேருந்து நிலைய வளாகத்தில் சிறு வியாபர கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது விடயத்தில் தவிசாளர் செயலளாரின் உதவியுடன் தன்னிச்சையாக வழங்கி வருவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஆ சிவநேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
கரைச்சி பிரதேச சபையின் சமகால போக்கு தொடர்பில் கரைத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்
மேலும் அவர் தெரிவிக்கையில் –
சபையில் ஆரம்ப காலங்களில் கூறியது போல் அல்லாது தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுவது ஆனது ஏனைய உறுப்பினர்களை புறம் தள்ளி தான் சார்ந்த கட்சியை வளர்பதற்கான முயற்சியை மேற்கொள்வதையே அவதானிக்க முடிகின்றது.
அத்தோடு சபையில் தெரிவிக்கபடுன்கிற கருத்துகளுக்கு மாறாக தவிசாளர் செயலளார் ஊடாக தனது கட்சி உறுப்பினர்களுடன் மட்டும் சென்று சில முன் எடுப்புகளை தன்னிச்சையாக மேற்கொண்டு வருவதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. இது ஏனைய உறுப்பினர்களை உதாசீனம் செய்யும் செயல் எனவும் சிவநேஷன் தெருவித்தார்
Related posts:
|
|