தவளைகளின் இரத்தத்தை குடிக்கும் புதிய வகை நுளம்பு இனம் இலங்கையில் கண்டுபிடிப்பு!

Monday, October 23rd, 2023

இலங்கையில் தவளைகளின் இரத்தத்தை குடிக்கும் புதிய வகை நுளம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் மீரிகம பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யுரேனோடேனியா ட்ரிலினேட்டா’ (‘Uranotaenia Trilineata’) என அடையாளம் காணப்பட்டுள்ள இது இலங்கையில் தற்போது பதிவாகியுள்ள சிறிய வகை நுளம்பு இனமாகும் என பூச்சியியல் அதிகாரி கயான் ஸ்ரீ குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இவை 2-3 மில்லி மீற்றர் அளவுள்ளவை. சுமார் 108 வருடங்களுக்கு முன்னர் தென் கொரியாவில் இந்த நுளம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், இவை தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

யாழ் மாவட்டத்திற்கு மேலும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் தேவை – மாவட்ட கொரோனா ஒழிப்பு...
ஜெனிவாவால் இலங்கையின் நாடாளுமன்றத்தை மாற்ற முடியாது - போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கையை சர்வதேச நீத...
எதிர்வரும் 20 வருடங்களில் வாகன விபத்துக்களால் 60 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கும் சாத்தியம் - பேராதனை பல...