தவறிழைத்த அரச அதிகாரிகள் தொடர்பில் எழுத்து மூலம் அறிவியுங்கள் – வடக்கின் ஆளுநர் கோரிக்கை!

Wednesday, December 1st, 2021

வடக்கு மாகாணத்தில் அரச நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அந்த விடயங்களை எனக்கு எழுத்து மூலம் சமர்ப்பணம் செய்யுங்கள் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மனிதாபிமானத்துடன் அதற்கான விடயங்களை விரைந்து முன்னிறுத்துவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்க நிறுவனங்களில் தினமும் 8 மணிநேரம் கடமையாற்றும் அரச அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் அரச அலுவலர்களால் முன்னிலைப்படுத்தும் அனைத்து விடயங்களையும் மூன்று நாள்களுக்குள் பதில் அளிக்கவேண்டும்.

கடந்தகால கணக்காய்வு விடயங்கள் எதுவும் நிலுவையில் இல்லை. எனினும், ஆவணங்களை – பதிவுகளை அழிக்கும் முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது.

2021 இல் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள நிதியை நாங்கள் குறைவாகப் பயன்படுத்தியுள்ளோம். இது மக்கள் பார்வையில் துரோகச் செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: