தவறாது ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள் : மருத்துவர் ரணில் ஜயவர்தன வலியுறுத்து!

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க ஊட்டச்சத்துள்ள உணவை உட்கொள்வது முக்கியம் என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் அதிக மூலிகைகள் மற்றும் பழங்களைச் சேர்க்க வேண்டும் என்று பேராசிரியர் மருத்துவர் ரணில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸுக்கு குறிப்பிட்ட மருந்து எதுவும் இல்லை என்றும் பொதுமக்களுக்கு ஒரே தீர்வு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுதான் என்றும் மருத்துவர் சுட்டிக்காட்டுகிறார்.
தற்போதைய நிலைமை மக்களின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்றும் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவை தவறாமல் சாப்பிடுவது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நிபுணர் மருத்துவர் ரணில் ஜெயவர்த்தன மேலும் கருத்து தெரிவிக்கையில் –
“நார்ச்சத்துள்ள உணவுகள் நம் உணவில் பிரதானமாக இருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்திக்கு விற்றமின் சி மிகவும் முக்கியமானது.
அவை காய்கறிகள் மற்றும் பழங்களிலிருந்து வருகின்றன. நாள் முழுவதும் குறைந்தது 3 வகையான காய்கறிகளைச் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
புரதம் அவசியம். பிஸ்கட், கேக் அல்லது இனிப்புகள். இவற்றில் அவற்றின் சத்துக்கள் மிகவும் மோசமாக உள்ளன. பழங்கள், பால் மற்றும் விதைகளை இடையில் எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|