தவணை முறையில் மின் இணைப்பு கட்டணம் செலுத்தலாம் – மின்சாரசபை!

Thursday, January 19th, 2017

புதிய மின்னிணைப்புக் கட்டணத்தை செலுத்துவதற்கு இயலாதவர்களுக்கான தவணை அடிப்படையிலான கட்டண முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என  பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் தமித்த குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,

தற்போதைய அரசு நடப்பாண்டில் வறுமையை இல்லாது ஒழிக்க உறுதி எடுத்துள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தவணைக் கொடுப்பனவு முறைமைக்கான வழிகாட்டி ஊடாக எந்த ஒரு நபரும் ஒரு மின்சார இணைப்பை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும். இந்தத் தவணைக் கொடுப்பனவு முறைமைக்கான வழிகாட்டியில் அறிவிக்கப்பட்ட குடும்ப வருமானத்தின் 5 வீதத்தை விட அதிகமாகாது. அதிகபட்ச பணக் கழிப்பானது 1,500ரூபாவை விட அதிகரிக்காது. இந்தத் தவணைக் கொடுப்பனவு மூலம் 24 மாதங்களில் கட்டணத்தை செலுத்தலம் என்றுள்ளது.

599fb29aa9701270b6a9ff19f1902a35_XL

Related posts: