தவணைப் பரீட்சை நேர அட்டவணை பாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பு!

Friday, March 16th, 2018

வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தால் வடக்கு மாகாணப் பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை தொடர்பான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அட்டவணை வடக்கு மாகாண 12 வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாக அனைத்துப் பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் இடை நிலைப் பிரிவுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை நடைபெறும். ஆரம்பக் கல்விக்கான பரீட்சைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரையும் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக தொண்டமனாறு வெளிக்கள நிலையத்தால் உயர்தர மாணவர்களுக்கு நடத்தப்படும் பரீட்சை நேர அட்டவணையும் உயர்தரப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த ஆண்டு பரீட்சை எழுதும் உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை 15 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 4 ஆம் திகதி நிறைவடையும். 2019 ஆம் ஆண்டு பரீட்சை எழுதும் உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை 23 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 4 ஆம் திகதி நிறைவடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாம் தவணைப் பரீட்சை பாடசாலை மட்டத்தில் நடத்தப்படுகின்ற போதிலும் சில கல்வி வலயங்கள் முக்கியமான தரங்களுக்கு வலயமட்டத்தில் வினாத்தாள்களை தயாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: