தழிழ்நாட்டில் உள்ள 2500 இலங்கை அகதிகள் நாடுதிரும்ப விருப்பம்!
Friday, October 21st, 2016தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளில் 2500 பேர் இலங்கை திரும்புவதற்கு தயாராக உள்ளனர். இவர்களது பயணத்திற்கு கப்பல் சேவையை இந்தியா மேற்கொள்ளவுள்ளது என்று இந்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் விக்காஸ் சுவருப் (Vikas Swarup) தெரிவித்துள்ளார்.
தழிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் தமது தாய் நாட்டுக்கு திரும்புவது தொடர்பில் இந்தியாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.இலங்கை அகதிகள் திருப்பி அனுப்பப்படுவது தொடர்பாகவே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தாயகம் திரும்பவுள்ள 2500 அகதிகள் தொடர்பான பெயர்ப்பட்டியல் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கடந்த ஆகஸ்ட் 19ம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர்களுக்கான கப்பல் சேவையை ஒழுங்கு செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவதாகவும் இந்த கப்பலுக்கான செலவுகள் அனைத்தையும் இந்தியா ஏற்றுக்கொள்ளும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதி தெரிவித்துள்ளார்.
தழிழகத்தில் உள்ள அகதிகள் தமது சொந்த விருப்பத்தின் பெயரிலேயே தாய்நாட்டிற்கு திரும்புகின்றனர். இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என்று இந்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்திய வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் வார இறுதியில் கொழும்புக்கு செல்லவுள்ளார். அவர் இலங்கையுடனான கூட்டுப்பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறுவிடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்றும் இந்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இந்திய இணையத்தளம் ஒன்றிற்று வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இந்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் விக்காஸ் சுவருப் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|