தலைவர் பதவிக்கு சுமந்திரன் ஶ்ரீதரன் இருமுனைப் போட்டி – முக்கிய உறுப்பினர்களுக்குள் வலுப்பெற்றுள்ள முரண்பாடு – இரண்டாக உடைகின்றதா தமிழரசுக் கட்சி!

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரம் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் கட்சியின் முக்கிய பதவிநிலை உறுப்பினர்களுகள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களுக்கிடையே கடும் முரண்பாடுகள் உருவாகியுள்ளதாக அக்கட்சியை மையப்படுத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் இலங்கை தமிழரசுக் கட்சி தேசிய மாநாட்டை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் இதன்போது கட்சியின் புதிய தலைவர் தெரிவு செய்யப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.
முன்பதாக கட்சியின் மத்திய செயற்குழு கூடி புதிய தலைவரை முடிவு செய்யும் என்றும், புதிய தலைமைக்கு அதிக வேட்பு மனுக்கள் வந்தால் பொதுக்குழு கூடி புதிய தலைமையை முடிவு செய்யும் என்றும் சமீபத்தில் கூடிய மத்திய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இதற்கு முன்னர் கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்காக வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை, என்பதுடன் கட்சியால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவரே தலைவராக தெரிவு செய்யப்பட்டு வந்துள்ளதுஃ
ஆனால் இந்த முறை அந்த மரபு மாறி இரு முனை போட்டி ஏற்பட்டுள்ளதாகல் முக்கிய உறுப்பினர்களுக்கள் பிளவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதால் கட்சியின் எதிர்காலம் தலைகீழாக மாறிவிட்டதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
000
Related posts:
|
|