தலைவர்களை பாதுகாப்பது மட்டும் பொலிஸாரின் கடமை இல்லை – ஜனாதிபதி!

Sunday, September 4th, 2016

பொலிஸார் ஜனாதிபதியையோ அல்லது அரசாங்கத்தையோ பாதுகாக்கும் கடமையை கொண்டிருக்கவில்லை  அவர்கள் பொதுமக்களுக்கு சேவை செய்பவர்களாக இருக்கவேண்டும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை பொலிஸின் 150வது ஆண்டுநிறைவை முன்னிட்டு நேற்று பொலிஸ் தலைமையகத்தில் இடம் பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது ஜனாதிபதி இந்தக்கருத்துக்களை வெளியிட்டார். இந்த  நிலைமையே கடந்த காலங்களில் பின்பற்றப்பட்டு வந்தன. பல அரசியல்வாதிகள், தமது சொந்த நலன்களுக்காக பொலிஸாரை பயன்படுத்துகின்றனர்.

அத்துடன் பல பொலிஸ் அதிகாரிகளும் அரசியல்வாதிகளின் உறவுகளை பேணுவதை குறிக்கோளாக கொண்டிருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். எனவே இதனை விடுத்து பொதுமக்களின் பாதுகாப்பு என்ற விடயத்தை மாத்திரமே பொலிஸ்துறைநோக்காக கொண்டிருக்கவேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அது ஒரு மனிதாபிமான சேவையாகவே கருதப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். பொலிஸார் பொதுமக்களுக்காக உயிர்களை மாத்திரம் அர்ப்பணிக்கவில்லை அவர்கள் தொடர்ந்தும் வீதிகளில் கடமைகளின்போது உணவின்றி உறக்கமின்றி உரிய வேதனம் இன்றி சேவையாற்றுவதையும் தாம் அறிந்திருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இலங்கையின் பொலிஸ்சேவை 1866ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் திகதியன்றுஆரம்பிக்கப்பட்டது. இதன்போது 560 பொலிஸ் அலுவலர்கள், 47பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றினார்கள். மேலும், தற்போது 450 பொலிஸ் நிலையங்களில் 84ஆயிரம் பொலிஸார் கடமையாற்றுகின்றனர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

maithiri 5555


இரண்டாவது சேவை நிறைவேற்று அதிகாரி பதவி தரம் II க்கான போட்டிப்பரீட்சை!
யாழில் யுவதி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை!
கிருமித் தொற்றால் மாணவன் உயிரிழப்பு - அனலைதீவில் சோகம்!
யாழ் போதனா வைத்தியசாலைக்கு விரைவில் எம்.ஆர்.ஐ.ஸ்கானர் - அமைச்சர் ராஜித!
1000 கிலோ கிராம் போதைப் பொருட்களை அழிப்பதற்கு நடவடிக்கை!