தலையில் இரும்புக் கம்பியால் பலமாக குத்தப்பட்டு ஆபத்தான நிலையில் இளைஞர் ஒருவர் யாழ். போதனாவில் அனுமதி!

Saturday, December 15th, 2018

புத்தளம் பகுதியைச் சேர்ந்தோருக்கு இடையே முல்லைத்தீவுப் பகுதியில் இடம்பெற்ற கைகலப்பில் இளைஞர் ஒருவர் தலையில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இளைஞரின் காதுக்கு மேற்பகுதியில் இரும்புக் கம்பி ஒன்றால் குத்தப்பட்டு கம்பி மற்றக்காதுக்கு மேல் பகுதி வழியாக வெளியே வந்துள்ளது என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

இந்தக் கைகலப்பு நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

புத்தளத்திலிருந்து பழைய இரும்புகளைக் கொள்வனவு செய்வதற்காக இளைஞரும் அவருடைய சகாக்களும் வடி வாகனத்தில் முல்லைத்தீவுக்கு வருகை தந்துள்ளனர். முல்லைத்தீவு நகருக்கு அண்மித்த இடமொன்றில் மர நிழலில் இளைப்பாறியபோது இளைஞருக்கும் சகாக்களுக்கும் இடையே முறுகல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதன்போது இளைஞர் மீது மற்றொருவர் இரும்புக் கம்பியால் குத்தினார். அதனால் அவர் நிலை குலைந்து சரிந்தார். தலையில் காயத்துடன் முல்லைத்தீவு வைத்தியசாலையில் நேற்று பி.ப 1.40 மணிக்கு சேர்க்கப்பட்டார்.

அங்கிருந்து அவர் அம்புலன்ஸில் நேற்று மாலை 4.30 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இளைஞருக்கு அதிகளவு குருதிப்போக்கு ஏற்பட்டுள்ளது. அவரது தலை ஸ்கான் செய்து பார்க்கப்பட்டது. இரும்புக் கம்பி ஒரு காதுப் பக்கமாக நுழைந்து மறு காதுப் பக்கமாக வெளியில் வந்துள்ளது.

Related posts: